பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தனிமைச் சிறப்பு . )ー 19

'ஆரியமும் செந்தமிழும் ஆனான் கண்டாய்" எனக் கூறியிருக்கின்றனர்.

வடக்கே ஆரியம் அங்கிருந்த பல மொழிகளிலும் பரவியது. சிலவற்றை விழுங்கியது. சிலவற்றை உருமாற்றிப் புதியமொழியாக உண்டு பண்ணியது. சிலவற்றைத் தன்னோடு இரண்டறக் கலக்கக் செய்துவிட்டது அத்தகைய மொழிகள் பலவற்றை இன்று வடக்கே காணலாம். ஆனால் தெற்கே தமிழ் மொழி சில மொழிகளைப் பெற்றது. G|6ുഖ கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,துளு முதலியன. "கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாமும் துளுவும் உன் உதிரத்து உதித்து எழுந்து ஒன்று பலவாயின' என்ற சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ்தாய் வாழ்த்திலிருந்தும் இவ்வுண்மையை நன்குணரலாம். -

இம் மொழிகள்கூட மக்களின் விழிப்புக் குறைவினால், தமிழைவிட்டுச் சிறிது விலகி வடமொழியைச் சார்ந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட, இம் மொழிகளில் நூற்றுக்கு எழுபது, எண்பது தமிழ்ச் சொற்கள் காணப்பட்டன. வர வர 60,50,40 ஆகக் குறைந்துவந்து, இப்போது நூற்றுக்கு 40 தமிழ்ச் சொற்கள் மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் இம் மொழிகள் ஆரியத்தால் விழுங்கப்பட்டு விடும் நிலையிலிருந்து வருகின்றன. மொழி அறிவும், வரலாற்று உண்மையும் அறியாத சிலர், "இம் மொழிகள் ஆரியத்திலிருந்தே வந்தன" என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு அம் மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன.