பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தனிமைச் சிறப்பு

தமிழ்மொழி ஒரு தனி மொழி, தனித்துத் தோன்றித் தனித்து இயங்கும் மொழி. அதற்கு எந்த மொழியின் துணையும் அன்றும் தேவைப்பட்டதில்லை; இன்றும் தேவைப்படுவதில்லை.

இந்தியாவில் இன்று பேசப்பெற்று வரும் மொழிகள் அனைத்தும் இரண்டே இனங்களில் அடங்கிவிடும். ஒன்று ஆரியம்; மற்றொன்று தமிழ். தமிழுக்குத் திசை தெற்கு மலை பொதிகை நாகரிகம் காவிரி. ஆரியத்திற்குத் திசை வடக்கு மலை இமயம்; நாகரிகம் கங்கை,

தமிழ்நாடு தமிழர் பிறந்து, வளர்ந்து ஆட்சி செய்து வாழ்கின்ற நாடு. எனினும் ஒருகாலத்தில் அவர்களின் ஆட்சி இமயம்வரை பரவியிருந்தது. தமிழ் மன்னன் ஒருவனுக்கு "இமய வரம்பன்' எனப்பெயர். இமயத்தில் கொடிகட்டிவாழ்ந்த தமிழ் மன்னர்களும்

1.-16A)ff. .

ஆசியர் மத்திய ஆசியாவிலிருந்து இந்நாட்டில் குடியேறியவர் ஆரிய மொழி இந்நாட்டில்குடியேறிய மொழி, "சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினது எனப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ்த்தால்ய நினைந்து, வியந்து பாராட்டியுள்ள சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

பிற்காலத்தே தோன்றிய சமயாச்சாரியார்கள் பலர் இவை இரண்டையும் ஒன்றாக்க முயன்றனர். இறைவனைக் கூட