பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு )— 17

வீதமும் தொண்டைக்குக் கீழேயிருந்து வலிந்து ஒலித்தாக வேண்டும். அவை "பஹாத் அச்சாஹ் போன்றவை.

வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை. அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை. இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்து விடுகிறது. இவ்வுண்மையை வடமொழி அறிஞர்கள் "கதா காலட்சேபம் செய்யும் பொழுது பசும்பாலை அடிக்கடி குடித்துக் குடலை நனைத்துக் கொண்டே பேசுவதிலிருந்தும், தமிழறிஞர்கள் பச்சைத் தண்ணிரும் அருந்தாமல் பல மணிநேரம் பேசுவதிலிருந்தும் கூட நன்கறியலாம். -

ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம். -