பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 —C தமிழின் சிறப்)

சேர்ந்தகூட்டு எழுத்துக்கள் 216. 'க் உகு" "ப்..அ.ட" "ம்.இ மி' என்பனவே இவை. இவற்றுள் எந்த எழுத்தை எழுத வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் இரண்டிரண்டஎழுத்துக்களை எழுதியாக வேண்டும். க. கி, கு என எழுதவேண்டுமானால், ஆங்கிலத்தில் Ka,Ki,Ku, என ஆறு எழுத்துக்களளை எழுதியாக வேண்டும். "தடி' என எழுத வேண்டுமானால் தமிழில் இரண்டு எழுத்தே. ஆனால் ஆங்கிலத்தில் இதை THAD என ஐந்து எழுத்துக்களில்தான் எழுத முடியும். ஆகவே, தமிழ் எழுத மிகவும் எளிது.

தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழில் ஒரு எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடிகிறது. -

உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே. இவைகளை அறியப் பெரியவர்களுக்குச் சில வாரங்களும், சிறியவர்களுக்குச் சில மாதங்களும் போதுமானது. பின் எடுத்த நூல்களையெல்லாம் படிக்கலாம். ஆகவே, தமிழ் படிக்கவும் எளிதானது.

தமிழ்மொழி பேசவும் எளிது.தமிழ்ச்சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு அண்ணாக்கு உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும். தொண்டைக்குக்கீழே வேலையேயிராது. பிறமொழிச் சொற்கள் சிலவற்றிற்கு 100-க்கு 30-40 வீதமும் சிலவற்றிற்கு 60-70