பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எளிமைச் சிறப்பு

தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப் பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது. -

சீன சப்பானிய மொழிகளின் எழுத்துக்களைப் போல் மேலிருந்து கீழ்நோக்கி எழுதுகின்ற, அல்லது உருது மொழி எழுத்துக்களைப் போல வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எழுதுகின்ற கடினமான முறை தமிழுக்கு இல்லை. இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி எளிதாக எழுதலாம்.

சில மொழிகளின், எழுத்துக்கள், எழுதுகோலைப் பல முறை எடுத்து, மேலும், கீழும், பக்கவாட்டிலும் சில புள்ளிகளையும் குறிகளையும் இட்டு எழுதியாக வேண்டும். தமிழ் எழுத்துக்களோ எனில், எழுத்தாணியையோ, எழுத்துக்கோலையோ எடுக்காமலேயே தொடர்ந்து எளிதாக எழுதிக் கொண்டே செல்லலாம். சில மொழி எழுத்துக்கள் ஒரு எழுத்தை எழுதவே பலமுறை எழுதுகோலை எடுத்தெடுத்துக் குறிகளிட்டு எழுதக் கூடியவை. இத் தொல்லை தமிழ் எழுத்துக்களுக்கு இல்லை.

தமிழ் எழுத்துக்களே மொத்தம் 31 தான். அவை அ, ஆ, இ, ஈ முதலிய உயிரெழுத்து 13ம்: க்,ங்,ச்,ஞ், முதலிய மெய்யெழுத்து 18ம் ஆகும். இந்த 31 எழுத்துக்களையும் தெரிந்து கொள்ளச் சில நாட்களே போதுமானவை, உயிரெழுத்தும், மெய்யெழுத்தும்