பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 —C தமிழின் சிறப்)

பிழிந்தேன். நன்றாக வடித்தேன். அதனைக் கண்டு மகிழ்தேன். அதில் சிறிது குடித்தேன். களித்தேன். களைத்தேன். அயர்ந்தேன். மறந்தேன். இன்று காலை எழுந்தேன். நினைத்தேன். தேனை அடைத்தேன். எடுத்தேன். விரைந்தேன். நடந்தேன். வந்தேன். சேர்ந்தேன். இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன் என்று. -

நானும் இதைக் கேட்டு மகிழ்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன் அடடா, எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே? இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் 'படித்தேன்" எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி தேன் என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை!