பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 —Q தமிழின் சிற ப்)

'பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும் என்பது உண்மைக்கு மாறானது. 'கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும் என்பதைப் போன்றது.தமிழ் வளரவேண்டிய நிலையில் இல்லை. அப்படியே வளர்க்க வேண்டுமானாலும் அதற்கு இவர்கள் தேவையே இல்லை. ஏனெனில் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இன்னும் இளமை குன்றாமலிருந்து, எழுத்துலகிலும், பேச்சுலகிலும், இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கிவருகின்ற மொழி.

எந்த ஒரு மொழியாவது இன்று வளர்க்கவேண்டிய நிலையில் உள்ளதா? என்றால், அதற்கு சமற்கிருதம் என்றே விடைவரும். அதுதான் இன்று பேச முடியாமலும் உலக வழக்கு அழிந்தும். எழுத்தோடு நிற்கும் மொழி, அது மீண்டும் உயிர்பெற்றுப் பேச்சு வழக்கிலும் வர வேண்டுமானால், அதை வளர்த்துத்தான் ஆகவேண்டும். அதற்குப் பிறமொழிச் சொற்களும், வேற்றுமை உருபுகளும், எழுத்துகளும், ஒலிகளும் கட்டாயம் தேவைப்படும். அதையும், அம் மொழியினர் வேண்டுமானால், விரும்பினால் சேர்த்துக்கொள்ள முயலலாம். அதுவும் அவர்கள் விரும்பினால் தான். அவர்களைக் கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட

சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன்' என்க் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும்மொழி, புரியாமொழி என எந்தமொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை என்றால், அவன் அந்த மொழியைப்