பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தனிமைச் சிறப்பு D— 25

படிக்கவில்லை என்பது பொருள், தமிழ் தெரியவில்லை, புரியவில்லை என்றால்தமிழைப்படி, அதைவிட்டுநீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி நியாயமாகும்? அப்படி எழுதினாலும் அது ஒரு புதுமொழியாக இருக்குமேயன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்? இக் கூற்று நல்லறிஞர்களால் நகைத்து ஒதுக்கத் தக்கதாகும்.

அட்காக்கமிட்டி, லோக்சபா. ஜனாதிபதி, மஜ்துார், ஆகாசவாணி எல்லாம் புரியும்போது, தமிழனுக்குத்தமிழ் புரியாது எனக் கூறுவது வெட்கக்கேடானது. ஆங்கிலச் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் நன்கு உச்சரிக்கும் தமிழனுக்குத் தமிழ் உச்சரிக்க வராது எனக் கூறுவது மானக்கேடாகும்.

தமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. புதிதாகச் சொல்லை உருவாக்கவும் ஏற்ற மொழி. இரயில் சைக்கிள் என்பன நம் நாட்டுப் பொருள்களல்ல. அதற்குத் தமிழில் புகைவண்டி, மிதிவண்டி என மிக எளிதாகப் பெயரிட்டு விட்டனர். 'அண்டர் கிரவுண்டு டிரையினேஜ் என்பதற்கு என்ன பெயரிடலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழும் ஆங்கிலமும் அறியாத கொல்லி மலையிலிருந்து வந்த பட்டிக்காட்டு நண்பர் ஒருவர், நகரில் பல இடங்களில் குழிவெட்டியிருப்பதைப் பார்த்து, "இங்கு என்ன, புதை சாக்கடை போடுகிறார்களா?' எனக் கேட்டதும் வியந்து போனேன். எத்தனையோ கலைச்சொற்களை உருவாக்கலாம். உருவாக்க முடியும். அதற்கு எந்த மொழியின் துணையும் தேவையில்லை. இதுகாறுங் கூறியவற்றால் தமிழ் தனித்து இயங்கிவரும் ஓர் உயர்தனிச் செம்மொழி என நன்கறியலாம்.