பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தொன்மைச் சிறப்பு

தொன்று நிகழ்ந்த தனைத்தும்

அறிந்துள தொல்புவி வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்? என்றறியாத

இயல்பினள் எந் தமிழ்த்தாய்! -

- தொண்மைச் சிறப்பு - பாரதி பாடல்.

உலகில் முதல் முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல்கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். -

காவிரிப்பூம்பட்டினத்தில் நிலைத்து நின்று வாழும் தமிழ் மக்களைப் 'பதியெழு அறியாப் பழங்குடியினர்' என இளங்கோவடிகள் கூறுகிறார். இதற்கு உரை கூறவந்த அடியார்க்கு நல்லார், “படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்' எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது, “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினர் என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும். அது மழை பெய்து பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்.