பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 . C தமிழின் சிற ப்)

கடந்த உலகப் போரில் 'அபிசினியா' என்ற நாடு வீழ்ச்சியடைந்தது. அப்பொழுது "ஒராயிரம்' ஆண்டுகள் ஒரே இனத்தவரால் தொட்ர்ந்து ஆண்டுவந்த உலகின் பழமையான ஒரே நாடு வீழ்ச்சியடைந்தது என ஐரோப்பியப் பத்திரிகையாசிரியர் ஒருவர்.தனது இதழில் எழுதியிருந்தார் பாவம்! அவர் அறிந்தது அவ்வளவுதான். 'ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தவரால் ஒரே மொழியில் தொடர்ந்து ஆளப்பெற்று வந்த நாடு தமிழ்நாடு' என்பதை அறிந்திருந்தால், அவர் அவ்வாறு எழுதுவாரா? -

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமைக் கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டசெய்தியும், இலக்கியங்களாலும், வரலாற்றுகளாலும், கல் வெட்டுகளாலும் அறியப்பெறும் உண்மைகளாகும். இதனால், தமிழ் மொழியானது அக் காலத்திலேயே உள்நாட்டை ஆட்சி. புரிந்ததும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஒரு வல்லரசின் ஆட்சிமொழியாகவும் இருந்திருக்கிறது எனத் தெரியவருகிறது.

2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணப் பெறுகின்றன. -

2300 ஆண்டுகளுக்கு முன்னே சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியிலேயே எழுதப்பபெற்றிருக்கின்றன.