பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுதான்மைச் சிறப்பு D— 29

2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் நற்றிணை என்னும் சிறந்த தமிழ் நூல் தோன்றியிருக்கிறது. w

2600 ஆண்டுகளுக்கு முன்னுள்ள வான்மீகி காலத்திற்கு முன்பே தமிழில் அகமும் புறமும் தோன்றியிருந்திருக்கின்றன.

2800 ஆண்டுகளுக்கு முன்புரோமாபுரியை ஆண்டஏழாவது சாலமொன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில், தமிழ் நாட்டுப் பண்டங்களை தமிழ்நாட்டு வணிகர்கள், கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழ் மொழியிலேயே விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப் பொருள்களுக்கு இன்றும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி "ரைஸ் எனவும் மயில்தோகை"டோகை" எனவும், சந்தனம் 'சான்டல்" எனவும், தேக்கு 'டிக்கு" எனவும், கட்டுமரம் "கட்டமரான்' எனவும், இஞ்சி "ஜின்ஜர் எனவும் அணைக்கட்டு "அணைக்கட்" எனவும், ஒலை 'ஒல்லா' எனவும். கயிறு 'காயர்' எனவும், வெற்றிலை"வெற்றல்" எனவும், மாங்காய் மேங்கோ" எனவும் ஆயின.காலப்போக்கில் இத் தமிழ்ச்சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டுவிட்டன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் "தொல்காப்பியம்" ஒன்றே அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருந்திருக்கின்றன். இவ் உண்மையை "என்ப", "என்மனார் புலவர்', 'யாப்பென மொழிப் யாப்பறி ുഖ",