பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 —C . + சிறப்)

'தோலென மொழிப தொன்மொழிப் புலவர்' எனத் தொல்காப்பியரே தமது நூலில் கூறி யிருப்பதால் நன்கறியலாம்.

3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப் பெறுகிற நூல்களில் “அகத்தியம்' எனப்படும். தமிழ் இலக்கணநூல் ஒன்று. அதை5000 ஆண்டுகளுக்கு முன்புள்ளது: 7000 ஆண்டுகளுக்கு முன்புள்ளது; 9000 ஆண்டுகளுக்கு முன்புள்ளது எனக் கூறுவாரும் உண்டு. 'அகத்தியத்'தைச் செய்தவர் அகத்தியர். இவர் தான் தமிழ் மொழியை உண்டுபண்ணியவர் எனவும், இவர் அகஸ்தியர் என்ற வடமொழி அறிஞர் எனவும் சிலர் கூறுவர். அவர் அறியாதவர். அக் கருத்து - நல்லறிஞர்களால் கொள்ளப்பெற்றதன்று.தமிழ் என்றும் உள்ளது. அகத்தியர் அம் மொழியைப் படித்து, அறிந்து, புகன்று புகழடைந்தவர் எனக் கூறியாக வேண்டும். இவ் உண்மையை “என்றும் உள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் என்ற அகத்தியரைப் பற்றிய கம்பரது வாக்கே மெய்ப்பிக்கும்.

தமிழ் மன்னர்களைப் தமிழ்ப் புலவர்கள் வாழ்த்தும் பொழுது, அவரவர் ஆற்று மணல்களின் எண்ணிக்கையை விட அதிகமான ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துக் கூறுவது ஒரு மரபு. அவ்வாறு சேரருக்குப்பொருநை'யும், சோழருக்குக்"காவிரி"யும் போல, பாண்டியருக்கு 'வையை"யைக் கூறாமல் 'பஃறுளி மணலினும் பலவாய்ச்சிறக்கநின் ஆயுள்" எனக் கடல் கோளுக்கு முன்னுள்ள குடும்பத்துப் பாண்டியரைப் புலவர் நச்செள்ளையார் வாழ்த்தியிருக்கிறார் (புறம் 9). இதிலிருந்து இப் புறப்பாடல் தோன்றும் பொழுது, பஃறுளியாறும், குமரி மலையும், கபாடபுரமும் கடலால் அழியவில்லையெனத் தெரிகிறது.