பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுதான்மைச் சிறப்பு D— 31

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றிக் கடல்நீர் நாட்டிற் புகுந்து நிலப்பரப்பை மக்களை தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும். இது நடந்தகாலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது. மேலைநாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும், அவை 5000-ம் ஆண்டுகளுக்கு முன்பும், 2000-ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர். இதைக் கொண்டு ஆராய்வோம், தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாதபோது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம், அதற்கு முன்னே இலக்கியம் தோன்றிய காலம், அதற்கு முன்னே எழுத்து உரைநடை தோன்றிய காலம், அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம், அதற்கு முன்னே மொழி தோன்றி காலம், எப்போது? என்பது எவர் எவ்வாறு அறிந்து கூற இயலும்? ஏதேனும் கூறவேண்டுமானால், தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றே கூறியாக வேண்டும். இது காறும் கூறியவற்றால் தமிழின் தொன்மையைச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.