பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சுழிச் சிறப்பு

தமிழில் யார், எதை எழுதினாலும் முதலில் ஒரு சுழியைச் (உ) சுழித்துவிட்டே எழுதத் தொடங்குவர். அச்சியற்றப் பெற்ற நூல்களிலும்கூட இச் சுழியைக் காணலாம். இம்மாதிரி ஒரு சுழி பிறமொழி எழுத்துக்களில் இல்லை. இதனைப் பிள்ளையார் சுழி எனக் கூறுவதுண்டு.

தமிழகத்தில் பிள்ளையார் வணக்கம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வந்தது. அதற்கு முன் இங்கு இல்லை. சங்க கால நூல்கள் எதிலும் "விநாயகர்", 'விக்கினேஸ்வரர்' என்ற வடமொழிப் பெயர்கள் இல்லாவிட்டாலும் 'பிள்ளையார்' என்ற தமிழ்ப் பெயர்கூடக் காணப்படவில்லை. இப்போது இங்கு ஆராய வந்தது பிள்ளையார் வணக்கத்தைப் பற்றியல்ல. பிள்ளையார்சுழியைப் பற்றியே.கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னுள்ள சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும்கூட பிள்ளையார் சுழி காணப்பெறுகிறது. இச் சுழி தமிழ் எழுத்து தோன்றியபோதே தோன்றியது எனக் கூறுவாறுமுளர் w

'பின்னே வந்த பிள்ளையாரின் பெயர் முன்னே உள்ள எழுத்துக்கு எப்படி வந்தது?" என்பதே இங்கு நாம் ஆராய வேண்டியது.

தமிழ் மக்களல்லாத பிறர் தங்கள் எழுத்துக்களைக் கற்களிலும், மரப்பட்டைகளிலும், பட்டுத்துணிகளிலும் எழுதி வந்தனர்.