பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(fយប់ o - )ー 33

இந்தியாவின் வடபகுதியிலும்கூட தாழை மடல்களிலும், தாமரை இலைகளிலும் எழுதி வந்துள்ளனர். காலப்போக்கில் அவை தேய்ந்தும், உளுத்தும். இற்றும். அழிந்தும் போயின. தமிழ் மக்களோ தங்களின் எழுத்துக்களைப் பனைமரத்தின் உச்சியிலேறிக் குருத்து ஒலைகளைக் கொண்டுவந்து, அதில் கொல்லுலைக் கூடத்தில் வடித்த ஆணிகளைக் கொண்டு எழுதி வந்தனர். எழுதுகிற ஆணி எழுத்தாணி ஆயிற்று. தமிழ் மக்கள் தேடிக் கண்டுபிடித்து எழுதிய ஓலைகள் ஈராயிரம் ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கின்றன. அதற்குமுன் நமது முன்னோர்கள் எதில் எழுதினார்களோ? அவைகள் எல்லாம் பயனற்றவை எனக் காண எத்தனை ஆயிரம் ஆண்டுகளாயினவோ? இறுதியில் ஒலையில் எழுதுவதே நல்லது எனக் கண்டுபிடிக்கவும், இனி ஒலையில்தான் அனைவரும் எழுதவேண்டும் என முடிவு கட்டவும், மக்களுக்கு அறிவிக்கவும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயினவோ? யாரால்? எவ்விதம் காணமுடியும்? ஆனாலும், ஒலையில் எழுதும் பழக்கம் தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்டே தோன்றி யிருக்கிறது என்பது மட்டும் நன்கு விளங்கியது. - -

ஒலையில் எழுதுவதும் ஒரு கலை அதில் எல்லோராலும் எழுத இயலாது. ஒலை காய்ந்திருந்தாலும் எழுத வராது; பச்சையாக இருந்தாலும் எழுத வராது: எழுத்தாணி கூர்மையாக இருந்தாலும் எழுத வராது. மொக்கையாக இருந்தாலும் எழுத வராது. ஆகவே ஒலையை எழுத எடுத்ததும் அதன் பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும் கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. ஒலை காய்ந்திருந்தால் முறியும் பச்சையாகவிருந்தால் சிக்கும். உடனே