பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தமிழின் சிறப்பி

அதைத் தூக்கியெறிந்துவிட்டு, மற்றொரு பதமான ஒலையை எடுத்து, அதிலும் ஒரு சுழியைச் சுழித்துப் பார்ப்பதுண்டு.

எழுத்தாணி மொக்கையாக இருந்தால் வளவள என ஒடும். எழுத வராது. உடனே தீட்டிக் கொள்ளவர்கள். கூர்மையாக இருந்தால் ஒலையைப் பொத்துவிடும். பலகையில் ஒரு குத்துக் குத்தி மொக்கையாக் ஆக்கிக் கொண்டு. மறுபடியும் ஒலையில் ஒரு சுழியைச் சுழித்து இழுத்துப் பார்ப்பார்கள். இந்த முதல் சுழிதான் இறுதியில் பிள்ளையார் சுழி என்று ஆகியிருக்க வேண்டும் எனத் தோன்றியது. என்றாலும், இது என் அறிவுப் பசிக்கு முழு உணவும் அளிக்கவில்லை. .

தமிழ் எழுத்துக்களுக்கெல்லாம் உயிராக இருப்பது அதன் உயிர் எழத்துக்களே. அவ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும் சுழியையே அடிப்படையாகக் கொண்டவை. "அ" ஒரு சுழி. 'ஆ' இரு சுழி. "இ" சிறு சுழி ஒன்று பெருஞ் சுழி ஒன்று. "இ" அல்லது 'ஈ' சிறுசுழி. மறுபடியும் ஒரு சிறு சுழி. 'உ' ஒரு சுழி, ' இரு சுழி, "எ" ஒரு சுழி. "ஏ" ஒரு சுழி, "ஐ" நான்கு சுழி. "ஒ" ஒரு சுழி. 'ஒ' இரு சுழி. 'ஒள' மூன்று சுழி. 'ஃ' மூன்று சுழி. எனவே தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் சுழியையை அடிப்படையாகக் கொண்டவை எனவும், முதலில் சுழிக்கக்கற்றுக்கொண்டால்தான், தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் எளிதாக எழுதலாம் எனவும் தோன்றின. -

ஆங்கில எழுத்துக்களை எழுதச் சுழிக்க வேண்டுமென்ப தில்லை. தீக்குச்சிகளைக் கொண்டே அவ்வெழுத்துக்களை அமைத்துவிடலாம். இரண்டு தீக்குச்சிகளைக் கீழ் நோக்கி வைத்தால், A இப்படியே அவற்றை மேல் நோக்கி வைத்தால்