பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ ற் சிறப்பு —T 4.7

கைம்மலை, கறையடி, அறுகு, ஆம்பல், நந்தி, தும்பி, தூங்கல் எனும் இவையனைத்தும் யானையைக் குறிப்பன. இவை தமிழின் சொற்சிறப்பைக் காட்டுவனவாம்.

'இராம ஜெயம்' என்பது வடமொழியிலுள்ள இரு சொற்களைக் கொண்ட ஒருசொற்றொடர். இதன் பொருள் என்ன? 'ராம வெற்றி' என்பதே. இது பொருளைத் தெளிவாக விளக்கவில்லை. ஏனெனில், இது வேற்றுமையுரு இல்லாதது. தமிழில் வேற்றுமை உருபு கலப்பதால் அது பொருளை நன்கு விளக்கிக் காட்டுகிறது. எவ்விதமெனில், -

இராமனை வெற்றி, இராமனால் வெற்றி. இராமனுக்கு வெற்றி, இராமனின் வெற்றி இராமனது வெற்றி, இராமனுடைய வெற்றி இராமனிடத்தில் வெற்றி, இராமா வெற்றி. என்ற எட்டும் வேற்றுமை உருபுகலந்தவை. இந்த எட்டில் 'இராம ஜெயும்" என்பது எதைக் குறிக்கிறது? தமிழில் உள்ள சொற்சிறப்பைக் காட்ட இவை போதுமானவை.

'தமிழ மொழியில் 86200 சொற்கள் உள்ளன என்பது மறைமலையடிகளின் கருத்து. இவையனைத்தும் தமிழ் மொழிக்கே உரியன. இந்த அளவு அதிக எண்ணிக்கையுடைய சொந்தச் சொற்கள் உள்ள மொழி, உலகில் வேறு எந்த மொழியும் ജ്ഞാ. v.

இதுகாறுங் கூறியவற்றால் தமிழ் மொழியின் சொற் ിജ്ഞു நன்கறியலாம். - ; :