பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழின் 16 செல்வங்களைக் கொண்ட 'தமிழின் சிறப்பு” என்ற இந் நூலைத் தமிழ்த்தாயின் திருவடிகளில் வைத்து வணங்குகிறேன்.

நான் ஓரளவு தமிழறிவு பெறுவதற்கு உறுதுணையாக இருந்துவந்த உயர்திரு. மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், நாவலர் ந.மு.வே. நாட்டார் ஐயா, பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் ஆகிய தமிழ்ச் சான்றோர்களுக்கு இந் நூலைக் காணிக்கை யாக்குகிறேன்.

விரைந்து எழுதப்பெற்ற இந் நூலில் சில பிழைகள் இருக்கலாம். அவற்றை எடுத்துக்காட்டி இதன் அடுத்த பதிப்பு திருத்தமாக வெளிவரத் துணைபுரியுமாறு தமிழகப் புலவர் பெருமக்களை வணக்கமாக வேண்டுகிறேன்.

படிக்கத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்நூல் பாடநூலாகவும் அமையுமானால் நான் பெரிதும் மகிழ்வேன்.

இந் நூலை ஒப்புநோக்கி உதவிபுரிந்த தமிழறிஞர் திரு. வித்துவான் மு. சண்முகம் பிள்ளை அவர்களுக்கும், மதிப்புரை வழங்கிய பன்மொழிப்புலவர் திரு. கா. அப்பாத் துரையார் அவர்களுக்கும், அச்சிட்டு வழங்கிய பூரீ வெங்கடேஸ்வரா அசச்கத்தாருக்கும், வெளியிட்டு உதவிய சென்னை பாரிநிலையத்தாருக்கும் எனது நன்றி.கலந்தவணக்கம்.

தி.பி. 2000, பங்.1 தங்களன்பிற்குரிய, திருச்சிராப்பள்ளி-8 கி.ஆ.பெ. விசுவநாதம்