பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ಣಿ சிறப்பு - ) ;: 51

"ஜி" ஒலியும்"கே" ஒலியும் வரும். இவற்றை கெம்" என்பதாலும் “ஜெம்" என்பதாலும் அறியலாம். சில ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்து இருக்கும் ஒலியிருக்காது. டால்க் என எழுதி 'டாக்" எனவும், "வால்க் என எழுதி 'வாக்" எனவும் ஒலித்தாக வேண்டும். 'டி' எழுத்துக்கு சிலவிடத்தில் ட்' ஒலியும் சிலவிடத்தில் 'வி ஒலியும் வரும். இதனை மோடிவ்' மோஷன் என்பதால் நன்கறியலாம். தமிழ் ஒலியில் இத் தொல்லை இல்லை.

"எஸ்.ஏ.என்” என்பதையும் 'எஸ் யூ என்' என்பதையும் "எஸ். ஓ, என்' என்பதையும் "சன்' என்றே ஒலித்தாக வேண்டும். இந்த மாறுபட்ட எழுத்துக்களை எழுதி, ஒன்றுபட்ட ஒலியால் ஒலித்து, வேறுபட்ட பொருள்களைக் காண வேண்டும். ஏன் எப்படி? எதற்காக இப்படி ஒலித்தாக வேண்டும்? என்பதற்கு விதியும் இல்லை. இத் தொல்லையும் தமிழ் ஒலிக்கு இல்லை.

11.தமிழில் ஒலி இலக்கணம் ஒன்றுண்டு. அது எந்த எழுத்தை எவ்வளவு காலம் ஒலிக்க வேண்டும் என்பது, "அ.இ.உ,எ,ஒ' என்ற குறில் எழுத்துக்களை ஒலிக்கும் அளவு ஒரு மாத்திரை. "ஆஈ.ஊ.ஏ,ஓ" என்ற நெடில் எழுத்துக்களை ஒலிக்கவேண்டிய கால அளவு இரண்டு மாத்திரை. க்,ப்,ம்,ச்ட் போன்ற மெய்யெழுத்துக்களை ஒலிக்கும் கால அளவு அரை மாத்திரை. மாத்திரை என்பது நொடிப்பொழுது. அது நடுவிரலையும் பெருவிரலையும் சேர்த்து நொடிக்கும் காலம்.

இந்த நொடிப்பொழுதையும் கால, அரை முக்கால், ஒன்று என நான்காகப் பிரித்து கணக்கிட்டிருப்பது பெரு வியப்பைத் தருவதாகும். நொடிக்க வேண்டும் என எண்ணுவது கால்