பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவிதைச் சிறப்பு - }- 57

1. இவ் வெண்பாவில் 320 எழுத்துக்களை74 எழுத்துக்களாகக் குறைத்தும் பொருள் குறையவில்லை.

2. கவிதையாக அமைக்கப்பெற்றால் நினைவாற்றலுக்குள் அடங்குகிறது; ஆனால் மேலே உள்ள உரைநடை அடங்காது.

3. மெய்-விரி; புகை-கண் கண்ட-காரி-உண்ட-உயிர் என்பன

மோனைகள். -

4. மெய்யில்-கையில், கண்ட-உண்ட என்பன எதுகைகள், இவை நினைவாற்றலுக்குத் துணை செய்பவை.

5. கண்ட அளவு: கண்டளவு உண்ட+அளவு உண்டளவு: ஆனது சந்தியினால், இது கவிதைக்குள் சொற்களை ஒட்டும் பசை,

6. கவிதையோமெய்யில் தொடங்கி உயிரில் முடிகிறது.

7. மெய்-உயிர் என்பதால் உடம்பைக் கண்டு உயிர் போயிற்று என்பதும், உண்மையைக் கண்டு உயிர் போயிற்று என்பதும் பொருள் நயங்கள்.

8.உடலிற் புழுதி அவள் ஓடிவந்ததோற்றம் அவிழ்ந்த கூந்தல் கணவனிழந்த தோற்றம், கையிலுள்ள சிலம்பு தன் கணவன் கள்வனல்லன் என்பதற்குச் சான்று, கண்களிலிருந்து வழியும் நீர் வாழ்விழந்த தோற்றம்; காரிகையின் சொற்களில் உண்மை; இந்த ஐந்தையும் கண்டதுமே மன்னன் உயிரையும் தோற்றான் என்பது கருத்துநயம் * ,

9. மன்னன் தன்மீது பழிபோக்கும் முன்னே உயிர் போக்கி கொண்டது ஒரு தமிழ்ப் பண்பாடு.