பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 —s தமிழின் சிறப்பு)

இந்த ஒன்பதுவகை நயங்களையும் இவ் வெண்பாவிற் காணலாம். பிறமொழிக்கவிதைகளில் இவற்றுள் இரண்டொன்றை மட்டுமே காணலாம். சிலவற்றில் மூன்றும் காணலாம். இவை முழுதும் காணவேண்டுமானல் தமிழ்க் கவிதைகளில்தான் காண முடியும், என்னே தமிழ் மொழியின் கவிதைச் சிறப்பு: பழந்தமிழ்ப் பெருமக்கள் சொற்களைக் குறைத்து எழுத்துச் சுருக்கமாகக் கவிதைகளாகக் கட்டிவைக்க மட்டும் கற்றுக் கொண்டில்லை; கட்டப்பட்ட கவிதைகளை விரிக்கவும் கற்றிருந்தனர். ஒலைச் சுவடியின் கட்டை அவிழ்த்து விரிப்பது மட்டும் அல்ல விரிவு: அதிலுள்ள கவிதையின் பொருளை விரிப்பதும் விரிவாகும். அவ்வாறு செய்வது விரிவுரை: செய்பவர் விரிவுரையாளர். என்னே தமிழ் மக்கள் கண்ட கவிதை!

இதுகாறும் கூறியவாற்றால் தமிழ்க் கவிதைகளின் சிறப்பை ஒருவாறு அறியலாம்.