பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கலைச் சிறப்பு

கலை பல வகை, அதில் தமிழின், தமிழிரின், தமிழகத்தின் கலை ஒரு தனி வகை. அதில் எழுத்துக் கலை, சொற்கலை, கவிதைக்கலை, மருத்துவக் கலை, இசைக்கலை, நடனக்கலை, நடிப்புக்கலை முதலியவற்றை இந் நூலின் பிற பகுதிகளில் காணலாம். இவற்றைத் தவிரக் காவியக் கலை, ஓவியக் கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை, வானநூற்கலை, கணிதநூற்கலை, உளநூற்கலை, உடற் பயிற்சிக்கலை, கைத்தொழிற்கலை, உழவுத்தொழிற் கலை, நுண்கலை, சாகாக்கலை, பாசனக்கலை, ஆட்சிக் கலை ஆகிய கலைகள் இருபத்தொன்றும் தமிழுக்கே உரிய கலை என நல்லறிஞர் கூறுவதுண்டு. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்.

ஆய்வுக்கலை தமிழ்மக்கள் எதனையும் துருவி ஆராய்ந்து கண்டெடுத்து, அவற்றைத் தொகைப்படுத்தி, முறைப்படுத்தி, வகைப்படுத்தி, பெயர்ப்படுத்திச் செயல்படுத்துவதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தலை சிறந்து விளங்கிவந்தனர்.

1. மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், காடும் காடுசார்ந்த இடமும்முல்லை எனவும்,மணலும் மணலைச் சார்ந்த இடமும் பாலை எனவும், வயலும் வயலும் சார்ந்த இடமும் மருதம் எனவும், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் எனவும் நிலத்தை ஐந்தாக ஆய்ந்து கண்டனர். கண்டு 3000-ம்