பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கலைச் சிறப்பு H 63

'சாரப்பள்ளம் என்ற பெயர்.இன்றும் இருந்து வருகிறது. இரும்பும் சிமெண்டும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்கட்டப்பெற்ற இக் கோபுரம் இன்னும் பழுதடையாமல் இருந்து வருவது. தமிழ் மக்களுடைய கட்டடக் கலையின் உயர்வையே காட்டுவதாகும். - - -

3. திருச்சிக்கு வடக்கே நான்கு மைல் @5766096ು g ரங்கம் என்று ஒர் ஊர் உள்ளது. அது நான்கு புறமும் நீர் சூழ்ந்து ஒரு தீவ் அது ஆற்றிடையிட்ட மேடு; ஆதலின் அரங்கம் எனப் பெயர் பெற்றது. அதனாலேயே அதிலுள்ள திருமாலும் திரு அரங்கர் என்றானார். - - - -

ஊருக்கும் கோயிலுக்கும் @G பெயர். அது திருவரங்கம் என்பது, இக் கோயிலுக்கு ஏழு மதில்கள் உள்ளன. இம் மதில்களுக்குள்ளாகவே வீடுகளும் தெருக்களும் கடை வீதிகளும் அடங்கியுள்ளன. * -

தெற்குக் கோபுரத்திற்கு மொட்டைக் கோபுரம் என்று பெயர் காரணம், கோபுரம் கட்டப்படாமல் கோபுரத்திற்குரிய அடித்தளம் மட்டும் கட்டப்பட்டிருப்பதே. நாற்புறமும் நான்கு கற்றுண்கள் நிற்கின்றன. கோயிலைச் சுற்றி நான்கு வெளிக்கோபுர வாயில்களிலும் பதினாறு கற்றுண்கள் நிறுத்தப்பெற்றுள்ளன. ஒவ்வொரு தூணின் அகலம் மூன்றடி, நீளம் மூன்றடி உயரம் 62 அடி, மேலே 42 அடி தெரிவதால் மூன்றில் ஒரு பங்கு இருபதடியாவது மண்ணில் புதைந்திருக்க வேண்டும். இன்றேல் அது வலுவாக நிலைத்து நில்லாது. இவ்வாறு 16 தூண்கள் ஒரே அளவில் எவ்வாறு கிடைத்தன? -- -