பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 —C ಸ್ತ್ರೀ à

சிமெண்டும் இல்லாமல், இக் காலப் பொறியியல் வல்லுநர் எவராலும் அணை கட்ட இயலாது. இவ்விரண்டுமே இல்லாது செங்கலும் சுண்ணாம்பும் கொண்டே இவ்வணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

எப்பொழுதும் நீர் ஓடிக்கொண்டிருக்கும் காவிரியில் எப்படி "அஸ்திவாரம்' போட்டார்கள்? எப்படிக் கட்டினார்கள்? எத்தனை ஆயிரம்பேர் கட்டினார்கள்? கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி உயர்ந்து கொண்டிருக்கும் அந்த ஈரக் கட்டடம் அடிக்கடி பெருக்கெடுத்து ஓடிவரும் வெள்ளத்தால் எப்படி அழிக்க முடியாமல் இருந்தது? சதுப்புநிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் சில ஆண்டுகளுக்குள்ளாகவே வெடிப்பிட்டுப் போவதைக் காணும் நமக்குத் தண்ணிலேயே "அஸ்திவாரம்' போட்ட கட்டடம் இரண்டாயிரம் ஆண்டுகளாகியும் வெடிப்பு ஏற்படாமல் எப்படி இருக்கிறது? என்பன போன்றவைகளை எண்ணும்போது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. இது பற்றிய பெரிய பெரிய பொறியில் வல்லுநர்களும் புரியாது தவிக்கின்றனர்.

2. கி.பி.1003ஆம் ஆண்டில் தொடங்கி, 1009க்குள் இராசராச சோழமன்னனால்கட்டிமுடிக்கப்பெற்றதஞ்சைப் பெருவுடையார் கோவில் தமிழ் மக்களின் கட்டடக்கலைக்கு ஒரு பெரும் சான்று. இதன் கோபுரத்தின் உயரம் 216 L. அதன் உச்சியில் வைக்கப்பெற்ற கல்25',அடிசதுரமுள்ள ஒரே கல். அதன் எடை 80 டன். அதில் நான்கு புறமும் சுற்றி வைத்திருக்கும் நந்திகளின் எண்ணிக்கை எட்டு. அவை ஒவ்வொன்றின் உயரமும் 5, શ્નાવ.” நீளம் 6), இவைகளை உச்சிக்குக் கொண்டுபோக நான்கு மைல் தூரத்திலிருந்து சாரம் கட்டத் தொடங்கிய இடத்திற்கு