பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கலைச் சிறப்பு H 65

திருச்சியிலுள்ள தாயுமானவர் மலையையுடைத்தாலும் இவ்வளவு நீளத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தூண்கள்தான் கிடைக்கும். மற்றது முப்பது அடி நாற்பதடியிலும், வலுவற்றுப் பொரிந்து போயும். குட்டை நெட்டையாகவும்,கிடைக்கும். உயரத்தில் மட்டுமல்ல; அகலத்திலும் நீளத்திலும் கூட அளவு வேறுபட்டிருக்கும். யாவும் ஒரே அளவில் அமையாது. ஆனால் திருவரங்கத்தில்துக்கிநிறுத்தப் பெற்றுள்ள பதினாறு தூண்களும் அகலத்திலோ நீளத்திலே உயரத்திலோ அளவு வேறு பாடின்றி ஒரே அளவாக அமைந்திருப்பது நமக்குப் பெரும் வியப்பை அளிக்கிறது. இன்றைய தினம் ஒரு கட்டட ஒப்பந்தக்காரரிடம் இம்மாதிரி பதினாறு தூண்கள் திருவரங்கத்திற்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று ஒரு கட்டட ஒப்பந்தஞ் செய்ய முடியுமா? எத்தனை லட்சம் கொடுத்தாலும் அவை வந்து சேருமா என்பது ஐயப்பாடு. தமிழ் மக்களின் கட்டடக்கலை உயர்வை உலகத்திற்குக் காட்டிக் கொண்டிருக்க இது ஒன்றே போதுமானது.

சிற்பக் கலை ,

தமிழகத்தின் சிற்பக்கலை உலகம் முழுவதும் நன்கறிந்த ஒன்று. அது கட்டடக்கலையிலும் மிக உயர்ந்து. தமிழகத்துச் சிற்பக்கலையின் உயர்வைக் காட்டுவது தமிழகத்தின் கருங் கற்களே. பிற இடங்களில் காணும் கருங்கற்களைவிடத் தமிழகத்தின் கருங்கற்கள் தொன்மை வாய்ந்தவை. ஆதலின், அவை வன்மையும் திண்மையும் வாய்ந்து காணப்படுகின்றன.

கருங்கற்களின் தன்மைகளை ஆய்ந்து கூறுகின்ற ജ്ഞ ിക്കു

கடினமானது. அது வைரக்கற்களை ஆய்ந்து கூறும் முறையினும் கடினமானது. எந்தக் கல் எதற்கு உரியது என்பதைத்