பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 –C ខ្នាយ៉ាហ្វេ

í தேர்ந்தெடுப்பதே ஒரு கலை. அக் கலையில் சிற்பக்கலையினர் சிறந்து விளங்குகின்றனர். மற்றக் கலைகளைவிடச் சிற்பக்கலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் கருங்கல் நல்ல வைரம் பாய்ந்தவையாக இருக்க வேண்டும். மிக நுணக்கமான வேலைப்பாடுகளுக்கு அதிக வலிமையுள்ள கருங்கற்களே ஏற்றவை. இன்றேல் அவற்றில் நல்ல உரு அமையாது. அமையவும் அக்கற்கள் சிதறுண்டுவிடும் சிதறாது இருந்தாலும், மிகக்குறைந்த காலத்திலேயே அச் சிற்பங்கள் தேய்ந்தோ உடைந்தோபோய்விடும்.

தமிழ் மக்களின் சிற்பக்கலையைத் தமிழகத் திருக்கோயில் தூண்கள் அனைத்திலும் காணலாம். இவற்றுள் பேரூர்கோயில், மதுரைக் கோயில் தூண்களிலுள்ள சிற்பங்கள் மிகமிக உயர்ந்தவை. உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களையும் அறிஞர்களையும் இச் சிற்பங்கள் வியப்படையச் செய்து வருகின்றன. க்ாரணம் இக் கருங்கல் தூண்கள் உலகில் சில இடங்களில் காணப்படினும் இது போன்றதொரு சிற்பக்கலை உலகெங்கும் காணமுடியாதது என்பதே.

சில கோயில் துண்கள் இசைக்கருவிகளாக அமைந்திருக்கின்றன. ஒரே தூணில் பதினாறு வகையாகப் பிரித்துச் செதுக்கப்பெற்றிருக்கிறது. அது இரம்பம் போட்டு அறுத்ததுபோல் காணப்படுகிறது. ஆனால் இரம்பம் நுழைய இடம் இல்லை என்பது மட்டுமல்ல. கண்பார்வை கூட நுழைய இடமில்லை. கண்பார்வை நுழைய முடியாவிடத்தில்கூட கை வேலைகள் நுழைந்திருக்கின்றன. ஒவ்வொரு சிறுபகுதியும் தட்டத்தட்ட ஒவ்வொரு ஒலி கிளம்புகிறது. அனைத்தையும் தட்டி அருமையான இசையை முழக்க முடிகிறது. நமது முன்னோர்களான சிற்பக் கலையினரும் இசைக் கலையினரும்