பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 —C தமிழின் சிறப்பு

இக்காலத்தைப் போல வெளிநாடுகளிலிருந்து அக்காலத்தில் வண்ணம் வருவதில்லை. எல்லா வண்ணங்களும் தமிழகத்தில் செய்யப் பெற்றவையே.எந்தெந்த மூலிகையிலிருந்து எந்தெந்தச் சாற்றை எடுத்தார்களோ எந்தெந்தச் செடியின் வேரும் பட்டையும் எடுத்தார்களோ? எந்த அளவிற்கு எடுத்தார்களோ? எவ்வளவு காலம் கலந்தார்களோ? எவ்வளவு பொழுது காய்ச்சினார்களோ? ஒன்றும் நம்மால் அறியமுடியவில்லை. இந்த ஒரு கலையை நாம் அறிந்து கொண்டால் இந்த வண்ணக் கலவையை அனுப்பி, உலக முழுவதுள்ள செல்வங்களை இந்தியாவிற்கு நாம் கொண்டுவர முடியும் என் செய்வது? அறிந்தவரும் இல்லை; இதுபற்றி இருந்த நூல்களும் அழிந்து போயின. இதை எண்ண, எண்ண உள்ளம் புண்படுகிறது.

இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இக்கலை இந்தியாவில் திரும்ப மலரும் என்ற நம்பிக்கையும் அதற்குத் தமிழகம் துணை செய்யும் என்ற நம்பிக்கையும எனக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னே தமிழகத்தின் ஓவியக் கலை!

சாகாக் கலை

தமிழ்க்கலையில்சாகாக்கலைஎன்பதும் ஒன்று. இக்கலைதமிழ் மொழியில் மட்டுமே இருந்தது. அது இன்று அழிந்து ஒழிந்தது. எனினும் அக் கலையின் நிழலைப் பதினெட்டுச் சித்தர் பாடல்களில் காணலாம். சாகாக் கலையின் ஆசிரியர்களே சித்தர்கள். அக்கலையின் முடிவெல்லாம் ஒன்றேயொன்று: "அது அருமையாகப் பெற்ற இவ்வுடலைப் பல நூற்றாண்டுகள் அழியவிடாமல் பாதுகாக்க முடியும் என்பதே. அவ்வாறு செய்யாமல் பலர் தமது உடல்களை அழிய விடுவதைக் கண்டு அவர்கள் வந்திருக்கின்றனர். - '" . .