பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. இசைச் சிறப்பு

இசை பலவகை. அதில் தமிழிசை ஒருவகை. இரண்டெழுத்துள்ள இச்சொல் பொருள் அமைதியுடையது, சுதி, பாட்டு, பண், தாளம், பக்கயியம், பாடுவோர் உள்ளம், கேட்டோர் உள்ளம் ஆகிய அனைத்தும் இசைந்தால்தான் அதற்கு இசையென்று பெயர். இல்லாவிட்டால், அதன் பெயர் "இரைச்சல்” என்றாகிவிடும்.

இசைக்குப் புகழ் என்றும் பெயர் உண்டு ஈதல் இசைபட வாழ்தல் என்ற சொற்றொடரும் இதனை மெய்ப்பிக்கும். இசையென்னும் எச்சம் பெறாவிடின் வசையென்பவையத்தார்க் கெல்லாம் என்பதும், வசையிலாவண்பயன்குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் என்பதும், வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர் என்பதும் வள்ளுவர் வாக்கு. இதிலிருந்து வசைக்கு எதிர்மறை இசை என்பதை நன்கறியலாம். அக்காலத்து மன்னர்களைப் பாணரும் புலவரும் இசையின் மூலமே புகழ்ந்ததால், இப் பொருள் வந்தது போலும்!

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் எனக் குறிப்பிட்டனர். இறைவனை இசை கொண்டு பாடியே வணங்கினர்.இம்முறையில்பண்ணோடுகூடிய பக்திப்பாடல்கள் பல தமிழ் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம்,