பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@_L . . . D— 81

தமிழ் இசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழ் இசை என்பது தான் கருநாடக இசை, கருநாடக இசை என்பதுதான் தமிழ் இசை இரண்டும் வேறுபட்டவை அல்ல; ஒன்றே. -

வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோழ மண்டலக் கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றும்கூட மக்கள் துறையிலும் ஆட்சித் துறையிலும் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும் இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும், தமிழிசையைக் கரை நாட்டு இசை என்றும் வடக்கேயுள்ளவர் குறிப்பிட்டனர். அதையே பலரும் கர்நாட்டிசை யென்றனர். ஆங்கிலேயனும் அதை கர்நாட்டிக் இசை என்றான். ஆகவே கரை

நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பதே. - -

காலப்போக்கில் வடமொழியின்மீது பற்றும், வடநாட்டின்மீது காதலும் கொண்ட சிலர், கரைநாட்டு இசையை வடநாட்டு இசை என்றும், தமிழ் இசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தலைப்பட்டு விட்டனர். தமிழில் உள்ள இசைக்கலை நூற்கள் அனைத்தையும் வடமொழியில் பெயர்த்து எழுதினர். இந்த அளவோடு அவர்கள் நின்றுவிடவில்லை.தமிழ் மொழியில் உள்ள பாடல்களை வெறுத்து ஒதுக்கவும் தொடங்கினர். உயர்ந்த பக்திப்பாடல்களை இசையரங்கில் பாடாது விட்டனர். உயர்ந்த கருத்துக்கள் அமைந்த சித்தர்களின் பாடல்களையும், நாட்டுப்பாடல்களையும் அவர்கள் நாடோடிப் பாடல்கள் என்று எழுதியும் பேசியும் வந்தனர். இது தமிழை வெறுப்பதும், தமிழ்