பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 —Q தமிழின் சிறப்பு)

அறிஞர்களை இழிவுபடுத்துவதுமாகுமெனவும், தமிழ் மக்களும் தமிழறிஞர்களும் நாடோடிகளல்லர் எனவும், அவர்கள் தமக்கென்று ஒரு நாடும் தமக்கென்று ஒரு மொழியும் உள்ளவர் எனவும், தமக்கென ஒரு நாடும் மொழியும் இல்லாதவரே நாடோடிகள் எனவும் முழக்கிய பின்னரே, தமிழ்ப் பாடல்களை நாடோடிப் பாடல்கள் எனக் கூறிய நாடோடிகள் திருந்தினர். அரசாங்கத்தமிழ்வளர்ச்சிக்கழகப் பதிவேட்டிலும் இந்த நாடோடிப் பாடல் என்ற சொல் அழிக்கப்பெற்று. 'நாட்டுப்பாடல் என்று திருத்தப்பெற்றது. கலைக்களஞ்சியத்தில் உள்ள நாடோடிப் பாடல்கள், நாடோடி இலக்கியங்கள், நாடோடி ஓவியங்கள் என்பனவும், அதன் மறுபதிப்பில் திருத்தப் பெற வேண்டும்.

தமிழ் இசைக் கருவிகள் தமிழகத்தில் தமிழனால் கண்டுபிடிக்கப் பெற்றவை. அவை மூவகை என மேலே கண்டோம். அவற்றிற்குப் பெயரிட்ட தமிழ் மக்களும், தமிழுக்கே சிறப்பாக உள்ள ழ என்ற எழுத்தை அச்சொல் ஒவ்வொன்றிலும் வைத்துத் தோல் கருவிக்கு முழவு என்றும், துளைக்கருவிக்கு 'குழல் என்றும், நரம்புக் கருவிக்கு யாழ் என்றும் பெயரிட்டிருக்கின்றனர். இவை தமிழனின் சொந்தச் சொத்து. தமிழனால் கண்டுபிடிக்கப் பெற்றவை. தமிழ் எழுத்து உள்ளவை என அன்றே பதிவு செய்திருப்பது எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும். -

இக் கருத்தைப் பின்வரும் தமிழ்ப் பாடல் ஒன்று அரண் செய்கிறது. "மக்கள் முதல்முதல் விலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை உண்டு, அதன் தோல்களை மரக்கிளைகளில் காய வைத்தனர். காய்ந்த தோலின்மீது உலர்ந்த குச்சிகள் உராய்வதைக்கொண்டு தமிழன் தோற்கருவியைக்