பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ಾ சிறப்பு —T 83

கண்டுபிடித்தான். வேட்டையாடுகின்றபொழுது, வில்லின் நாணினின்று வெளிவரும் ஒலியைக்கொண்டு, நரம்புக் கருவியைக் கண்டுபிடித்தான். ஆற்றின் இரு கரைகளிலும் இருக்கின்ற நாணற்செடிகளில் உள்ள தீஞ்சுவையை வண்டுகள் துளைத்து உண்டபிறகு, அதனுள்ளே தென்றல் காற்று புகுந்து ஓசையிடுவதைக் கண்டு, தமிழன் துளைக் கருவியைக் கண்டுபிடித்தான்.”

'ஏழிசை மோகன் என்பது ஒரு சோழ மன்னனது பெயர் இராவணன் தென்திசை மன்னன். அவனுக்குத் தென்னவன் என்றும் பெயர். அவனது யாழிசையைக் கேட்டு, இறைவன் மகிழ்ந்து வரம் அளித்தான் என்பது இராமாயண வரலாறு. இதிலிருந்து தமிழிசையின் காலம் இராமாயண காலத்திற்கும் முற்பட்டது என்று தெரிகிறது, மொகஞ்சதரோவில் அகழ்ந்து எடுக்கப் பெற்ற இசைக் கருவிகள், 5000 ஆண்டுகளுக்கு முன்னைய தமிழிசைக் கருவிகள்.

Y.

தமிழிசையிலும் இசைக் கருவிகளிலும் யாழுக்கு முதன்மையுண்டு யாழ்நான்குவகைப்படும். அவை செங்கோட்டி யாழ், மகர யாழ், சகோட யாழ், பேரியாழ் எனப் பெயர் பெறும். ஒவ்வொன்றிற்கும் நரம்புகளின் எண்ணிக்கையும், நீளத்தின் அளவும் உண்டு. அந் நரம்புகளை மிழற்றுவதற்கும் இலக்கணம் உண்டு. இசையறிஞர்கள் அவற்றைத் துருவி ஆராய்ந்து, மூவகைப் படுத்தி நல்ல தமிழாலே அவற்றிற்குப் பெயரும் கண்டிருக்கின்றனர். அவை தெறித்தல், வருடுதல், உராய்தல் என்பன. யாழ் செய்யும் முறையையும், குழல் செய்யும் அளவையும், முழவு செய்யும் வகையையும், இவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும், பண் முதலியவைகளுக்கு