பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 —C تتكـ

இலக்கணங்களையும் வகுத்துத்தமிழ் இசை அறிஞர்கள் பல்வேறு நூல்களை இயற்றி இருந்தனர். அவைகளிற் பல அழிந்தொழிந்து போயின. - -

அவற்றில் என்னென்ன செல்வங்கள் இருந்தனவோ? அதன் ஆசிரியர் எவரெவரோ? அவை தோன்றிய காலம் எதெதுவோ? அவை போன்ற நூல்கள் இன்னும் என்னென்னவோ? அவை அழிந்தது எப்படியோ? யார் காண்பது? எவரால் அறிய முடியும்? மேலே கண்ட நூல்கள் இருந்து அழிந்தன என்பதைச் சில நூல்களில் காணப்படும் உரைகளால், உரைகளில் காணப்படும் மேற்கோள்களால், அறிய முடிகிறது.

அழிந்தவை போக இருக்கின்ற நூல்களாலும், உரைகளாலும், பாரம்பரியமாகக் கையாளப்பெற்று வருகிற இசை மரபுகளாலும், தமிழிசையின் தொன்மையை, சிறப்பை, தகுதியை, முறையை, அளவை, உயர்வை, ஒருவாறு காணமுடிகறிது. அவற்றுள் அடியில் குறிப்பிடுவன சில. அவையும் 2000 ஆண்டுகளுக்கு , . له 6(كا 5 سأسسألاLD%D) م

இசைக்கலை மூவகை

அவை ஆடல் பாடல், கொட்டு எனப் பெறும்.

1. ஆடல் இக் கூத்து 11 வகைப்படும். இவற்றுள் நின்றாடுதல் ஆறும்

வீழ்ந்து ஆடுதல் ஐந்தும் ஆகும். இவற்றை (அ) அல்லியம், ' கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லுடன்நின்றாடலாறு";