பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ಣಕ சிறப்பு -85 = (م

(ஆ) துடி, கடையம், பேடு, மரக்காலே, பாவை, வடிவுடன் வீழ்ந்தாட லைந்து' என்ற நூற்பாக்களால் அறியலாம்.

2. பாடல்

பாட்டு என்பது அக நாடகங்களுக்கும் புற நாடகங்களுக்கும் உரிய உருவாகும். அக நாடகங்களுக்குரிய உரு, 'கந்தம் முதல் பிரபந்தம் ஈறாக உள்ளவை 28, புறநாடகங்களுக்குரிய உரு, தேவபாணி முதலாக அரங்கொழிச் செய்யுள் ஈறாகச் செந்துறை விகற்பங்கள் அனைத்துமாகும். (அ) கந்தம் என்பது அடிவரையறையுள்ளது; ஒரு தாளத்தாற் புணர்ப்பது, (ஆ) ‘பிரபந்தம் என்பது அடிவரையறை இல்லாதது; பல தாளத்தாற் புணர்ப்பது.

3. கொட்டு -

கொட்டுஎன்பது கொட்டப்படுகின்ற இசைக்கருவிகள் இவை பாட்டுகுரியன; நாட்டியத்திற்குரியன; இவ்விரண்டிற்கும் உரியன என மூவகைப்படும். (அ) பாட்டிற்குரியன கீதாங்கம் எனப்படும். பாடல் என்பது இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம் உச்சம் ஆக எண்வகைப் பயனுடையதாகும். (ஆ) நாட்டியத்திற்குரியவை, நிருத்தாங்கம் எனப்படும். இது அகக்கூத்து, புறக்கூத்து இரண்டிற்கும் உரியது. கீற்று, கடிசரி முதலிய தேசிக்குரிய கால்கள் 14, சுற்றுதல், எறிதல் முதலாகிய வடுகுக்குரிய கால்கள் 14. உடல் தூக்கு முதலாகிய உடல் வர்த்தனை9-ஆக47ம் இதற்குரியன.(இ) இரண்டிற்கும் உரியது. ஆடலுக்கும், பாடலுக்கும் உரிய இது தாளம் ஆகும். கொட்டு, அசை, தூக்கு, அளவு என இது நான்கு நிலைகளையுடையது.