பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(FTE சிறப்பு - )ー 95

so

காட்சி இன்னும் என்னுள்ளத்தை விட்டு அகலவில்லை. அது நடிப்பு அவன் நடிகன் - - -

திருச்சியில் மணிக்கூண்டருகில் பட்டப்பகல் 12 மணிக்கு நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. சித்திரை மாத வெயில் கொதிக்கும் தரையில் பத்துமாதம் நிறைந்த பிள்ளைத்தாய்ச்சி மகப்பேறு பெறும் நிலையிலே மயக்கமிட்டுக் கிடக்கிறாள். அருகில் மூன்று குழந்தைகள். அடுத்துக் கணவனின் கவலை கொண்ட முகம். பெருங்கூட்டம் கூடிவிட்டது. காசுகள் குவிந்தன. சிறிது நேரத்தில் அவளும் மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். மக்களனைவர்க்கும் ஒரே மகிழ்ச்சி நானும் அவள் கணவனிடம் மெதுவாக அந்தப் பிள்ளைத்தாய்ச்சியை வீட்டுவரை அழைத்துவரச் சொன்ன்ேன். அவள்மிகவும் தொல்லைப்பட்டு வருந்தி மெதுவாக நடந்து வந்தாள். என் மனைவி அவளைக் கண்டதுமே கலங்கிப் பழைய சோறும், பழைய சேலையும் வழங்கினாள். அவளும் வாய் நிறைய வாழ்த்தினாள். -

உடனே என் மனைவியிடம், "அவள் பிள்ளைத் தாய்ச்சியல்ல; வயிற்றில்துணிமுட்டைவைத்துக்கட்டியிருக்கிறாள் எடுஅதை" என்றேன். என் மனைவி நம்பவில்லை பின் கட்டாயப் படுத்தினேன். எடுக்கப் போனாள். அவ்வளவுதான் அவள் துள்ளியெழுந்துதன்னையும் தன் கணவனையும் மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டு உண்மையையும் ஒப்புக் கொண்டாள். மிகுந்த கட்டாயத்தின் பேரில் வயிற்றில் கட்டியிருந்த துணியையும் எடுத்துக் காட்டினாள். பசிக் கொடுமையால் செய்த இத் தவறை மன்னியுங்கள் என்றும் வேண்டினாள். அவளுக்கு ஆடி விழும் என அனைவரும் நம்பினார்கள். -