பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 —C . _ញុំ

வரிசையில்உட்கார்ந்திருந்த ஒருன்ஆத்திரப்பட்டு, அவர்மீது தன் மிதியடியையெடுத்துவீசிவிட்டான். அதை அந்தநடிகர் எடுத்துக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து, தான் பெற்ற பரிசுகளுள் எல்லாம் மிக உயர்ந்த பரிசாக எண்ணி மகிழ்ந்து, நீண்ட நாள் பாதுகாத்து வந்தார்; நடிகரும் தன்னைச் சகுனியாகவே மாற்றிக் கொண்டார். மிதியடியை வீசியவரும் அவரை உண்மையான சகுனியென்றே நினைத்து விட்டார். இன்றேல் அந்த நடிகருக்கு இவ்வளவு உயர்ந்த பரிசு ஒருபோதும் கிடைத்திராது.

60 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் திரு. சீனிவாசம் பிள்ளை நாடகக் கம்பெனியின் சம்பூரண இராமாயணத்தைக் காணும்பேறு பெற்றேன். பரதன் இராமனைத் திரும்பவும் நாட்டிற்கு அழைக்க வரும் காட்சி அண்ணனைக் காட்டிற்கு அனுப்பியதோடு நில்லாமல், கொல்லவும் வருகிறான் பரதன் என்பது இலக்குவனின் எண்ணம். தன்வில்லில் நானேற்றி, பரதனையும் அவனோடு வருகிறவர்களையும் கொன்றுவிடத் துடிக்கிறான். 'என்னத்திற்குப் பரதன் படை வந்தது?’ என்ற பாட்டு, ஆர்ப்பாட்டமான நடிப்பு: அரங்கே நடுங்குகிறது. இராமனின் இடதுகை இலக்குவனின் முதுகைத் தடவுகிறது. சிறிது அமைதி எனினும், இலக்குவனுடைய பெருமூச்சு அடங்கவில்லை. பரதன் வந்தான்; இராமனுடைய திருவடிகளில் வீழ்ந்தான். இராமன் இலக்குமணனைக் கடைக்கண்ணால் நோக்கினான். அவ்வளவுதான் இலக்குவனுடைய தலை இடப்புறம் சாய்ந்தது. கோதண்டம் தரையில் ஊன்றியது. அதன் நூர்னியிற் கட்டியிருந்த மணி ஒர் அடி அடித்தது. சபையின் கைதட்டல் ஒலிவானைப் பிளந்தது. ஆடாமல் பாடாமல் அசையாமல் பேசாமல் இராமன் வேடந்தாங்கியவனுடைய கைகளும், கண்களும், நடித்த நடிப்பு எல்லோருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. இக்