பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(நாடகச் சிறப்பு H 93

நடிப்பது என்பது 'போலி': அதாவது உண்மையல்லாதது என்று பொருள்படும். நடிப்பு அனைத்தும் நடிப்பாகி விடாது.' "நடிப்பில் ஒரு துடிப்புக் காணப்பெறுவதே நடிப்பாகும். அத் துடிப்பும் ஆரவாரத்தில் தோன்றாமல் அமைதியில் தோன்றியாக வேண்டும். அதை உணர்ச்சியற்ற நடிகரிடத்தில் ஒருபோதும் காண முடியாது.

மாற்று உடை, மாற்று நடை, மாற்று வேடம், மாற்றுப் பேச்சு மட்டும் ஒரு நடிக்னுக்குத் துணை செய்யாது. அவன் மாற்று மனமும் படைத்தாக வேண்டும். இன்றேல் நடிப்பு:நடிப்பாயிராது, தேவையெல்லாம் 'உணர்ச்சி ஒன்றேயாகும், உணர்ச்சியற்ற 'நடிப்பில் உயிர் தோன்றாது. உயிர்த் துடிப்போடு ஒருவன் நடிக்க வேண்டுமானால், அவன் தன்னை அடியோடு மறந்து, தன் வேடத்திற்குரிய பாத்திரமாகவே மாறிவிடவேண்டும்.

"சத்திரமதி வேடம் பூண்ட ஒருவன் ஐந்து பிறவியெடுத்தாக வேண்டும். முதலில், அவன் தன்னைப் பெண்ணாகவே நினைத்துக் கொள்ள வேண்டும். (2) அதுவும் அரசனுடைய மனைவியாக எண்ணிக் கொள்ள வேண்டும். (3) அதுவும் ஒரே குழந்தையுள்ளவளாகக் கருதிக்கொள்ள வேண்டும். (4) அதுவும் இறந்துவிட்டதாக அறிய வேண்டும். (5) அதுவும் திடீரெனப் பாம்பு கடித்து இறந்ததாக உணர வேண்டும். அப்போதுதான் சந்திரமதி வேடம் பூண்டவனிடம் நடிப்பில் ஒரு துடிப்பும், சிறப்பும் காணப் பெறும். இன்றேல் சேலையணிந்து வந்து ஒரு பொம்மை, "அப்பா மகனே பாம்பு' எனப் பாடிப் போனதாகவே தோன்றும். - . . . ;

"மகாபாரதம் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அதில் ‘சகுனி யாக நடித்துக் கொண்டிருந்தவரைக் கண்டு, முன்,