பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. நாடகச் சிறப்பு

பழம் மூன்று மா, பலா, வாழை, தமிழ் மூன்று இயல் இசை, நாடகம், இரண்டுக்கும் உள்ள தொடர்பு மூன்று. இயற்றமிழ் மிகக் கடினம்; அது பலாப்பழத்தைச் சுவைப்பது போன்றது. பலாப்பழத்தைத் தூக்கினால் கனமாக இருக்கும்; அழுத்தினால் முள் குத்தும்; கிழித்தால் பால் வடியும்; உள்ளே கையை விட்டால் சக்கை வரும். அதனையும் மீறிச் சுளையை எடுத்தாலும் கொட்டையையும் கொப்பூழையும் நீக்கித்தான் சுவைக்க முடியும். இசைத் தமிழ் அவ்வளவு கடினமானதன்று அது மாம்பழத்தைப் போன்றது. இராகத்தோடும் தாளத்தோடும் இணைந்துள்ள இசையைச் சுவைப்பது தோலொடும் கொட்டையோடும் - இணைந்துள்ள சதையைச் சுவைப்பது போன்றது. நாடகத் தமிழ் இவ்விரண்டையும்விட மிகமிக எளிது. அது வாழைப்பழத்தைத் போன்றது. தோலை உரித்ததுமே முழுதும் சுவைக்கலாம்: நாடகத்தைப் பார்த்ததுமே, முழுதும் சுவைக்கலாம். எப்படி இம் முக்கனியும், முத்தமிழும்? -

'நாடகம்' என்பதை நாடு-அகம் எனப் பிரித்தால், அகத்தில் நாடுதல் என்றாகும். உள்ளத்தே உணர்ச்சியைத் துண்டுவது என்று பொருள்படும்.நாம் ஒரே இட்த்தில் இருந்து கொண்டுகாடு, மலை, நாடு, நகர், ஆறு, அரண்மனை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்தும், பல வகையான வேடங்களைத் தாங்கிய பல்வேறு மக்களின் போக்கு, பேச்சு, குணம், செயல் அனைத்தையும் ஒரே நேரத்தில் கண்டும், கேட்டும், உணர்ச்சி பெறுகிற ஒரே கலைக்கூடம் நாடகமேயாகும்.