பக்கம்:தமிழின் வெற்றி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் குற்றம்?

தமிழ் நூல்களில் புலவர்கள் பாராட்டிய மன் னர்களும் செல்வர்களும் பலர். அவர்களுக்குள்ளே முடியுடை மன்னர்கள் புலவர்களை ஆதரித்ததும், தம்பால் வந்த இரவலர்களுக்கு வேண்டிய அளவு பொருள் அளித்துப் பாதுகாத்ததும் அருமையான செயல்கள் அல்ல. அவ்வாறு செய்வதற்கு அவர்களி டம் கிரம்பின செல்வம் இருந்தது. ஆனல் சில சிற் றரசர்களும் செல்வர்களும் தங்களே நாடி வந்தவர் களுக்கு இல்லையென்று சொல்லாமல் அளித்து வந்தனர். பறவை, செடி ஆகியவற்றினிடங் கூட அவர்களுடைய கருணே சென்றது. அப்படி வாழ்ந்த வள்ளல்களுக்குள் சிறந்தவர்க ளென்று ஏழு பேரைப் புலவர்கள் சேர்த்துப் பாராட்டியிருக்கிருரர் கள். பாரத நாடு முழுவதும் வாழ்ந்த வள்ளல் களாகப் பதின்ைகு பேரை முதலெழு வள்ளல்கள் என்றும், இடையெழு வள்ளல்கள் என்றும் சொல் அம் வழக்கம் பிற்காலத்தில் உண்டாயிற்று. தமிழ், நாட்டில் வாழ்ந்த வள்ளல்களைக் கடையெழு வள்ளல் கள் என்று அந்த முறையிலே சொல்வார்கள்,

பல புலவர்கள் இந்த ஏழு வள்ளல்களை ஒருங்கு சேர்த்துச் சொல்லியிருக்கிருரர்கள். இந்த ஏழுபேர் களில் நள்ளி என்பவன் ஒருவன். அவன் கண் உரம் என்னும் மலேயைச் சார்ந்த இடத்தில் இருந்து வாழ்ந்த சிற்றரசன். தோட்டி என்ற மலே அவனுக்கு உரியதாக இருந்தது. புலவர்களுக்குக் கணக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/19&oldid=574784" இலிருந்து மீள்விக்கப்பட்டது