பக்கம்:தமிழின் வெற்றி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்b தமிழின் வெற்றி

அமைதி பரவியது தாமரை மலர் மலரும்போது வண்டுகள் மெல்லென்ற ஒலியோடு அதில் புகுவது போன்ற கினைப்பு உண்டாயிற்று. எங்கும் புது விழிப்பும் கலகலப்பும் முளைவிடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. கீழ் ஸ்தாயியிலிருந்து மெல்ல மெல்ல மேலே ஏறினன். கூட்டில் இருந்த பறவை ஜிவ்வென்று மேலே போகிற மாதிரி இருந்தது. ஆடாமல் அசையாமல் பாணன் பாடினன். அனே வரும் கேட்டார்கள். பாட்டு ஒரு வகையாக முடிவு பெற்றது. மருதப்பண்ணென்னும் இசைக்கடலின் மறுகரை இன்னும் தெரியவில்லை. சிறிது நேரம் கேட்பவர்களுடைய மனம் மருதப்பண்ணுேடே சஞ் சாரம் பண்ணிக் கொண்டிருந்தது. இனி அடுத்த பாட்டு ஆரம்பமாகவேண்டும். s

அதற்குள் நள்ளி மருதப் பண்ணிலே ஆழ்ந்து இடங்த மயக்கத்திலிருந்து விழித்து எழுந்தான். அருமையிலும் அருமை! மருதப் பண் காலே நேரத்தையே இப்போது இங்கே கொண்டு வந்து விட்டது. பாணனர் இது மாலை என்பதை மறந்து மருதத்தை வாசித்தார். நாமும் மாலையை மறந்து காலை என்ற உணர்ச்சியோடு இந்தப் பண்ணேக் கேட்டு இன்புற்ருேம். இதுவரையிலும் பலர் பாடி இந்தப் பண்ணேக் கேட்டிருக்கிறேன். ஆனல் இது ஒரு தனிச் சிறப்புடையதாக இருந்தது" என்று பாராட்டினன். அந்தப் பாராட்டினூடே, அவனுக்கு இசையைப் பற்றிய செய்திகளும் தெரியும் என்ப தைக் காட்டிக் கொண்டான்.

அவன் பேசியபொழுது அவன் கூறிய பாராட் டுரைகளைக் கேட்டு மகிழவில்லை பாணன். காலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/26&oldid=574791" இலிருந்து மீள்விக்கப்பட்டது