பக்கம்:தமிழின் வெற்றி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் குற்றம்? 49

களும் இருந்தார்கள். எதிர்ே பாணனும் அவனேச் சார்ந்தாரும் தங்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் உட்கார்ந்திருந்தனர். பாணர்தலேவன் முன்னே அமர்ந்திருந்தான். - . . . . . * . . இசையரங்கு தொடங்கியது. யாழுக்குச் சுருதி சேர்த்தார்கள். முதலில் பாணர் தலைவனே வாசிக் கத் தொடங்கினன். காலையில் மருதப்பண்ணிலே தோய்ந்து நின்ற அவன் உள்ளம் இன்னும் அந்த கிலேயினின்றும் மாறுமலே இருந்தது. இப்போது மாலை ; முறைப்படி செவ்வழிப்பண்ணே வாசிக்க வேண்டும். ஆனல் பாணன் உள்ளமும் காதும் இன் அனும் மருதப்பண்ணிலே லயித்திருந்தன. ஆதலின் அவன் பாடத் தொடங்கியபோது அவனையே அறி யாமல் அவன் விரல்கள் மருதப் பண்ணின் சுரங் களே எழுப்பின. எழுப்பின பிறகு அதன் இன் னிசை ஒலி மீட்டும் அவனேக் காலேயிலே யாழ்வாகிக் கிருேம் என்ற பிரமையை உண்டாக்கியது; காஜல. யில் வாசித்ததன் தொடர்ச்சியாக வாசிப்பதாகவே அவன் எண்ணிக்கொண்டு விட்டான். அப்படிக் சொல்வதைவிட, இப்போது மாலை என்ற கினேப்பே அவன் உள்ளத்திலே தோன்றவில்லை என்று சொல் வதுதான் பொருத்தமாக இருக்கும். - --

ஆரம்பத்தில், மாலேநேரத்தில் இவர் மருதப் பண்ணேப் பாடுகிருரே என்று இசையிலக்கணம் தெரிந்தவர்கள் மயங்கினர்கள். நள்ளியும் அப் படியே எண்ணினன். சிறிது நேரம் கழித்து யாவரும் அந்தப் பண்ணின் இனிமையில்ஆழ்ந்துபோனர்கள். பாணன் வாசித்துக் கொண்டே போனன். அவ னுடைய மருதப்பண் இசையிலே காலே கோத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/25&oldid=574790" இலிருந்து மீள்விக்கப்பட்டது