பக்கம்:தமிழின் வெற்றி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழின் வெற்றி

மகிழ்ச்சி உண்டாகும் என்ற எண்ணத்தால் அன்று இசையரங்கு நிகழும்படி திட்டம் செய்தான்.

வந்திருந்த பாணன் கள்ளியின் முன் இது காறும் யாழை வாசிக்கவில்லை. ஆலுைம் ஒவ்வொரு நாளும் தனியே இருந்து யாழை வாசித்துக் கொண் டிருந்தான். இசையில் வல்லவர்கள் நாள்தவரு மல் இசைப் பயிற்சியை விடாமல் செய்து வந்தால் தான் இசைத் திறமை அவர்களிடம் கிலேத்து கிம் கும். அன்று காலே பாணன் நெடுநேரம் யாழை வாசித்துக் கொண்டிருந்தான். கலைஞர்கள் தம் கலையினல் விளையும் இன்பத்தில் தாமே ஆழ்ந்து தம்மை மறந்து விடுவார்கள். இந்தப் பாணன் அன்று காலேயில் யாழை வாசித்தான். ஒவ்வொரு நேரத்துக்கும் இன்ன இன்ன பண் உரியதென்ற வரையறை உண்டு. காலேநேரத்துக்கு உரியது மரு தப் பண். மாலேநேரத்தில் பாடுவதற்குரியது செவ் வழிப் பண். பாணன் மருதப் பண்ணே மிகவிரி வாகப் பாடினன். அவன் இந்த உலகத்தையே மறந்து மருதப்பண்ணின் இசைக் கூறுகள் அலை ய்லேயாகப் பரவிமோத அந்தக் கடலில் வேறு ஒன் றையும் காணுத கிலேயில் ஈடுபட்டிருந்தான். யாழ் வாசிப்பதை நிறுத்தினபிறகும் மருதப்பண் அவன் காதிலும் கருத்திலும் ஒலித்துக் கொண்டே இருந் தது. அதனுடைய ஆரோகண அவரோகண கதியிலே அவன் இன்னும் மூழ்கியிருந்தான்.

மாலேயில் நள்ளி தன் அவைக்களத்தில் வீற்றி ருந்தான். அவனுக்கு அருகில் வன்பரணர் அமர்ந் திருந்தார். இருபக்கங்களிலும் வேறு சில புலவர் களும் நண்பர்களும் அதிகாரிகளும் அயலூர்க்காரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/24&oldid=574789" இலிருந்து மீள்விக்கப்பட்டது