பக்கம்:தமிழின் வெற்றி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் குற்றம் ? 17

வேறு அவசியமான வேலே உங்களுக்கு ஒன்றும் இாாதென்று எண்ணுகிறேன். இங்கே தங்குவதி ஆம் உங்களுக்குத் தடை இருக்க நியாயமில்லை. உப சார வகையில் ஏதேனும் குறையிருந்தாலும் பொருட்படுத்தாமல் இங்கே இன்னும் சில நாட் களேனும் தங்கில்ை எனக்கு மகிழ்ச்சியாக இருக் கும்' என்றும் சொன்னன்.

'தங்களுடைய திருவுள்ளப்படியே தங்களுக்கு எப்போது எங்கள் இசையைக் கேட்கமுடியுமோ அப்போது கேட்கலாம். எங்களுக்கு இங்கே கிடைக் கும் உபசாரம் இது தான் சொர்க்கபோகமோ என்று கினைக்கும் படியாக இருக்கிறது. இவ்வளவு நாட்களாக இங்கே வராமற்போனேமே என்று ஒவ் வொரு கணமும் நினைக்கிருேம்" என்று பாணன் விடை பகர்ந்தான்.

டு மலும் ஒரு வாரம் பாணனுடைய பாட்டைக் கேட்கும் செவ்வி நள்ளிக்குக் கிடைக்கவில்லை. பாட் டைக் கேட்கவேண்டு மென்ற ஆசை நாளுக்கு நாள் அவனுக்கு மிகுந்து வந்தது. கடைசியில் ஒரு நாள் மாலை பாணனும் அவனேச் சார்க்கவர்களும் தங்கள் யாழை வாசித்தும் பாடியும் காட்டுவதற்கு ஏற்பாடு ஆயிற்று. வேறு ஊர்களிலிருந்து கள்ளியைக் காண் பதற்குச் சிலர் வந்திருந்தார்கள். புலவர்கள் சில ரும் வந்தார்கள். வன்பரணர் என்ற புலவர் பெருமா லும் வந்திருந்தார். இத்தனே பேரும் இருக்கும்போது பாணனைப் பாடச் சொன்னல், அந்த இசையை யாவரும் அநுபவிக்கலாம், பாணனுக்கும் பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/23&oldid=574788" இலிருந்து மீள்விக்கப்பட்டது