பக்கம்:தமிழின் வெற்றி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 தமிழின் வெற்றி

ஆடைகளே அவனுக்கும் அவனுடன் வந்தவர் களுக் கும் அரண்மனை அதிகாரிகள் அளித்தார்கள். அவற்றை அணிந்து மனம் விரும்பிய மட்டும் இனிய உணவை உண்டு ஒரு நாளேக்கு ஒரு நாள் உடம்பு பொலிவு பெற, அவர்கள் அங்கே தங்கியிருந் தாாகள. - நள்ளி வந்தான். 'உங்களை இங்கு இருப்பவர் கள் சரியாகக் கவனித்துக் கொண்டார்களா? என்று கேட்டான். .

‘எங்கள் வாழ்நாளில் பெருத உபசாரங்களே இங்கே ஒரு வாரமாகப் பெற்று வாழ்கிருேம். முன்பு எங்களைப் பார்த்தவர்கள் இப்போது எங்களைப்பார்த் தால் அடையாளமே கண்டுபிடிக்க மாட்டார்கள்: என்முன் பாணன்.

'உங்கள் பெருந்தன்மையால் நீங்கள் அப்படித் தான் சொல்வீர்கள். நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் உங்களை வரவேற்று உபசரிப்பார் கள். பேரரசர்களிடம் உபசாரங்களைப் பெற்றிருப் பீர்கள். அந்த உபசாரங்களைவிடவா இங்கே சிறப் பாக நடக்க முடியும்?' என்று நள்ளி கூறினன்.

'உங்கள் யாழிசையை அமைதியாக இருந்து நெடு நேரம் கேட்கவேண்டு மென்று ஆசைப்படு கிறேன். அதற்குரிய வேளை வரவேண்டும். இங்கே என்னை நாடிச் சில அன்பர்கள் வருகிருரர்கள். மிக 'வும் அவசியமான சில ஆலோசனைகள் நடத்த வேண்டும். அதல்ை ஊருக்கு வந்தும் உங்கள் இசை யை உடனே கேட்கமுடியவில்லை. கேட்டோம் என்று பெயர் பண்ணுவதற்காகச் சிறிது நேரம் கேட்டு விட்டுப் போவது எனக்கு விருப்பம் அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/22&oldid=574787" இலிருந்து மீள்விக்கப்பட்டது