பக்கம்:தமிழின் வெற்றி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றிய பாட்டு

மதுரையில் ஆட்சி புரிந்து வந்த பராக்கிரம பாண்டியன் என்னும் அரசன் தமிழ்ப் புலவர் களிடம் மிகவும் மதிப்பு வைத்து உபசாரம் செய் பவன். வேறு எத்தகைய அரசியல் வேலேகள் இருந்தாலும், தமிழ்ப் புலவர்கள் வரின் அவர்களே எதிர்கொண்டு வரவேற்று உபசரித்து, அவர் களுடன் உரையாடித் தமிழ்ச் சுவை தெரிக் து இன் புறுவதில் அளவற்ற ஆர்வம் பூண்டவன் அப் பாண்டியன் என்பது தமிழ் நாடு முழுவதும் பரவிய செய்தி. இதல்ை அடுத்தடுத்து அப் பாண்டியனிடம் புலவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டுப் புலவர்களில் அவனிடம் சென்று பரிசு பெருத புலவர்களே இல்லே யென்று சொல்லலாம். . - ஒரு புலவர் பாண்டியனைப் பார்த்துப் பழகும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தார். சார்வபெளமர் என்பது அவர் பெயர். பல பிரபுக்களைக் கண்டு சென்று பாடிப் பரிசு பெற்றவர் அவர். பராக்கிரம பாண்டியனிடம் செல்ல வேண்டும், செல்ல வேண்டும். என்ற எண்ணம் மாத்திரம் அவருக்கு இருந்து வந்தது. வேறு புலவர்களைச் சந்திக்கும்போது, அவர்கள் பாண்டியனுடைய பெருமையையும் அவ னிடம் காங்கள் சென்று பெற்ற பரிசையும் எடுத் துச் சொல்வார்கள். அப்பொழுதெல்லாம், தாமும் பாண்டியனிடம் சென்று தம் புலமையைத் தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/51&oldid=574816" இலிருந்து மீள்விக்கப்பட்டது