பக்கம்:தமிழின் வெற்றி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றிய பாட்டு 43

அதுகாறும் வராத புலவர் அவர் என்பதை அவன் உணர்வான். அவரை வந்தவுடனே என்னிடம் அழைத்து வருவதற்கு என்ன?" என்று கேட்டான். * மன்னர்பிரான் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந் தமையால்..............' என்று அதிகாரி சமாதானம் சொல்ல வந்தார். ஆலோசனையைச் சிறிது கோம் கழித்துச் செய்யலாம். புலவரைக் காத்திருக்க வைக்கலாமா?' என்று கோபத்துடன் கேட்டான் பாண்டியன். -

சரி, இவ்வளவு நாள் காத்திருக்கும்படி செய்தி குற்றத்திற்கு நான் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். புலவர் என்னே வந்து பார்ப்பது கிடக் கட்டும். நானே அவர் உள்ள இடத்துக்குப் போய்ப் பார்ப்பேன். தமிழுக்கு நான் செய்த அபசாரத் துக்கு இதுதான் பரிகாரம்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டான் பாண்டியன்.

அங்கே, புலவர் இன்னும் அதிகாரி வந்து சேர வில்லையே என்று கோபத்துடன் காத்திருந்தார். இந்த மன்னனைத் தமிழ் நயம் தெரிந்தவன் என்று சொல்வதெல்லாம் புரட்டு' என்று தம்முள்ளே கூறிக் கொண்டார். புலவருக்குக் கோபம் வந்தால் அது பாட்டாக உருக்கொள்ளும். சார்வபெளமரும் கோபத்தைப் பாட்டிலே காட்டத் தொடங்கினர். ‘இவன் தமிழ் நூலறிவில் அகத்தியன் என்று சொல்வதெல்லாம் அறியாமை; உண்மை அல்ல' என்று சொல்ல ஆரம்பித்தார்.

எண்ணிர்மை அாலுக்கு அகத்தியன் ஆம்இவன்

என்பதெல்லாம் - வெண்ணிமை பன்றி விரகல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/55&oldid=574820" இலிருந்து மீள்விக்கப்பட்டது