பக்கம்:தமிழின் வெற்றி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருக்கழிந்த புலவர்.

சோமுகாட்டிலேபிறந்து வளர்ந்த புலவர் அவர். தமிழ்ப் புலமையிற் சிறந்தவர். ஆயினும் இறுமாப்பு மிகுதியாக உள்ளவர். தம்முடைய புலமைத் திறத் துக்கு எதிரே யாரும் கிற்க முடியாமல் செய்யவேண் டும் என்ற கருத்துடையவர். சாமானியப் புலவர் களாக இருந்தால் கேள்வி கேட்டும், அவர்கள் பாட லிற் குற்றம் கண்டும் அவமானப் படுத்தும் இயல் புடையவர். நல்லவர்கள் அவரைக் கண்டால் பேசா மல் ஒதுங்கிவிடுவார்கள், சிறிய புலவர்கள் அஞ்சி விலகுவார்கள். சோழ நாடு முழுவதிலும் அவர் செருக்குள்ளவர் என்ற செய்தி தெரியாதவர் இல்லை. அப்புலவர் பாண்டி நாட்டுக்குச் சென்று தம் புலமையை வெளிப்படுத்த வேண்டுமென்று கினைத் தார். அங்குள்ள புலவர்களைத் தலைகுனியச் செய்து மகிழவேண்டுமென்ற ஆசை அவருக்கு உண்டா யிற்று. மதுரையில் புலவர் பலர் இருப்பது அவருக் குத் தெரியும். இதுவரையில் அவர் அந்நகரத்துக்குச் சென்றதில்லை. பாண்டியனுடைய அவைக்களப் புலவர்களேக் கண்டு சோழன், சோழ நாடு, சோழ நாட்டுப் புலவர்கள் இவர்களின் பெருமையைச் சொல்லவும், தம் புலமையை வெளிப்படுத்தவும் விரும்பினர்.

மதுரைக்குப் போனர். பாண்டியனுடைய அவைக்களப்புலவர் இருக்குமிடம் சென்ரர். அங்கே பல புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் சோழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/59&oldid=574824" இலிருந்து மீள்விக்கப்பட்டது