பக்கம்:தமிழின் வெற்றி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

se தமிழின் வெற்றி பாட்டு முழுவதும் சொல்வதற்கு முன்பே இந்தப் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறதே

இல்லை, இல்லை; இந்த இரண்டடியாலே சோழன் புகழ் வெளிப்படவில்லை; சோழனுக்கு இகழ்ச்சியாகக் கூடப் பாட்டை முடிக்கலாம்."

இப்படி மதுரைப் புலவர் சொன்ன்வுடன் சோழ காட்டுப் புலவருக்குச் சினம் மூண்டது. སྣ་༔ ༔

'பாட்டில் வெளிப்படையாகச் சோழனது பெருமை விளங்குகிறது. நீங்கள் காக்கை வெள்ளே என்பது போலப் பேசுகிறீர்களே' என்ருர்,

'இதே இரண்டடியை வைத்துக்கொண்டு, உங் கள் சோழ மன்னனே இகழ்ந்தும் எங்கள் பாண்டி யனேப் புகழ்ந்தும் பின் இரண்டடிகள் சேர்த்துப் பாடலாம்.'

சோழ மண்டலப் புலவருக்கு ஆத்திரம் அதிக மாயிற்றே ஒழிய, விஷயம் ஒன்றும் விளங்கவில்லை. எங்கே, பாடுங்கள் பார்க்கலாம்' என்று கோபத் தோடு சொன்னர்.

மதுரைப் புலவர் அமைதியாகப் பாட்டைச் சொல்லத் தொடங்கினர். சோழன் முதுகுக்குக் கவசம் இடான்' என்று சோழ தேசப் புலவர் சொன்ன செய்திக்கு உரிய காரணம் இன்னதென் பதைப் பின் இரண்டடியில் வைத்துப் பாடினர்.

வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான் என்றும் முதுகுக்கு இடான்கவசம்-துன்றும் வெறியார் தோடைகமழும் மீனவர்கோன் கைவேல் எறியான் புறங்கொடுக்கின் என்று. சோழன் ஏன் முதுகுக்குக்கவசம் இடுவதில்லை தெரியுமா? புறங்காட்டாத இயல்புகாரணம் அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/62&oldid=574827" இலிருந்து மீள்விக்கப்பட்டது