பக்கம்:தமிழின் வெற்றி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செதுக்கழித்த புலவர் 57

சோழைேடு போர் செய்யும் ஆற்றல் பாண்டியனுக் குத் தான் உண்டு. அவனுடன் சோழன் போர் செய்தால் நிச்சயம் சோழன் புறமுதுகிட்டோடுவான். ஆனல் அவன் புறங்கொடுப்பதைக் கண்டவுடன் பாண்டியன் அவனே ஒன்றும் செய்யமாட்டான் ; அவன் முதுகின்மேல் வேலை எறியமாட்டான். அவ் வளவு உதாரகுணமும் பெரு வீரமும் உடையவன் பாண்டியன். முதுகில் வேலைப் பாண்டியன் எறிய மாட்டான் என்ற உறுதி இருக்கும்போது சோழன் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லே. அதனல் தான் சோழ மன்னன் முதுகுக்குக் கவசம் அணிவ தில்லை'-இப்படியெல்லாம் பொருள் கூறும்படியாக அந்தப் பாட்டு அமைந்தது. -

பாவம்' சோழ மண்டலப் புலவர் வாயடைத்துப் போனர். எது சோழனது வீரத்தை வெளிப் படுத் தும் என்று நினைத்தாரோ, அதையே வைத்து, அவ னுடைய இழிவையும் பாண்டியனது உயர்வையும் காட்டும்படி மதுரைப் புலவர் பாடி விட்டார். புலவர் செருக்கழிந்து அறிவு பெற்றர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/63&oldid=574828" இலிருந்து மீள்விக்கப்பட்டது