பக்கம்:தமிழின் வெற்றி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழின் வெற்றி

போகிறது என்று ஜைனர்கள் எண்ணிவிட்டார்கள். ஆகையால் அவர்கள் சிவாலய அதிகாரிகளிடம் உடம்பாடு பெறவில்லை. அந்தக் காலத்தில் ஊரில் வேறுபாடு இல்லாமல் யாவரும் மனம் ஒன்றுபட்டுப் பழகி வந்தார்கள். தாங்கள் கல் அறுப்பது தெரிக் தாலும் ஆலய அதிகாரிகள் ஒன்றும் சொல்ல மாட் டார்கள் என்று ஜைனர்கள் நம்பினர்கள். நல்ல காரியத்துக்குத்தானே நாம் மண் எடுக்கிருேம்? ஒரு மனிதன் தன் வீடு கட்ட உபயோகப்படுத்திக் கொள் வதாக இருந்தால் தவறு. இது பொதுக் காரியக் தானே?’ என்பது அவர்கள் எண்ணம்.

ஆல்ை, நல்ல காரியத்துக்குத்தானே நானூறு தடைகள் வரும்? மக்களுக்குள் சில இழி தகைமை யுடைய கயவர்கள் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டே இருக்கிருரர்கள். அவர்களால் நல்ல செயல் ஒன்றும் செய்ய இயலாவிட்டாலும், பிறருக் குத் தீங்கு புரிவதிலும் பிறர் செய்யும் நற்செய்கை களே இடைகின்று தடுப்பதிலும் அவர்கள் தம் . முடைய சாமர்த்தியத்தைக் காட்டுவார்கள். இத் தகைய பேர்வழிகளில் ஒருவர் ஜிலையத்துக்குச் செங்கல் அறுக்கும் வேலை நடைபெறுவதைக் கவனித்தார். தம்முடைய கலகம் மூட்டும் தொண் டுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததென்று மகிழ்ச்சி அடைந்தார். உடனே திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தோன்றத் துணேயீசர் திருக்கோயில் அதிகாரியிடம் சென்றர்.

'வரவரக் காலம் கெட்டுப் போய்விட்டது. கொள்ளக்காரர்கள் மிகுதியாகி விட்டார்கள் என்று பேச்சை ஆரம்பித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/88&oldid=574853" இலிருந்து மீள்விக்கப்பட்டது