பக்கம்:தமிழின் வெற்றி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோயில்

திருப்பாதிரிப்புலியூரிலும் அதற்கு அருகிலும் சில ஜைன சமயத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வழிபடும் கோயில் ஒன்று அவ்வூரில் இருந்தது. மிகச் சிறிய கோயிலாக இருந்ததனல் அதைப் பெரிதாகக் கட்டவேண்டுமென்று அன் பர்கள் எண்ணினர்கள். கருங்கல்லால் கட்ட இயல வில்லே; போதிய பொருள் இல்லாததுதான் காரணம். ஆகவே செங்கல்லால் கட்டலாம் என்று எண்ணி, அதற்கு வேண்டிய முயற்சியைச் செய்தார்கள்.

அக்த அன்பர் கூட்டத்தில் தொல்காப்பியத் தேவர் என்ற தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் சமரச ஞானம் உடையவர். ஒரு கடவுளே அந்த அந்த மதத்தினருக்கு ஏற்றபடி உருவம் கொண்டு அவர்களுடைய வழிபாட்டை ஏற்றருளுகிருர் என்ற எண்ணம் கொண்டவர். .

ஜைனர்கள் வணங்கும் கடவுளுக்கு அருகன், ஜினன் என்று பெயர். ஜிலையத்தைக் கட்ட வேறு ஓரிடத்தில் செங்கல் வாங்குவிதால்ை பொருட்செல வாகும் என்று எண்ணி, செங்கல் அறுத்துச் சூளை வைக்கலாம் என்று அன்பர்கள் தீர்மானித்தனர். ஓரிடத்தில் செங்கல் அறுத்து வந்தார்கள். அந்த இடம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவபெருமான் ஆலயத்தைச் சார்ந்தது. மண்ணே எடுத்துச்செங்கல் அறுப்பதல்ை யாருக்கு என்ன கஷ்டம் வரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/87&oldid=574852" இலிருந்து மீள்விக்கப்பட்டது